Saturday, May 29, 2010

ஆன்சைட் ட்ரீம்ஸ்- 7

மறுநாள் காலை
பனிபொழிவ ரோஜா படத்துல மணிரத்னம் காட்டினத விட நல்லாவே இருந்துச்சு நேர்ல பார்க்குறதுக்கு. சூடான சீக்கரி காப்பி குடுத்து எழுப்ப சுபா இல்லை. ஆராத்தழுவி என் மார்பின் மேல் சாய ராஜீவ் இல்லை. சுப்ரபாதம், ஊதுபத்தியின் வாசம் எதுவும் இல்லை. என்னுடைய ஃபிளாட் ஆடம்பரமாக தான் இருந்தது. ஆனால் வெறுமையே மிகையாக தோன்றியது."சொர்க்கமே என்றாலும் அது நம்மூர
போல வருமா" எனும் கங்கை அமரனின் வரிகள் என் மனதில் வந்து போனது.
"எந்த ஊரும் அழகு தான், நமக்கு பிடித்தவர் அருகில் இருக்கயில்". போதாக்குறைக்கு "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது" பாட்ட
வேற போட்டு வெறுப்பேத்திட்டு இருந்தாங்க எல்லா தமிழ் சேனல்லயும். திடீர்னு ஒரு கருப்பு கலர் கார் ஒண்ணு என் அப்பார்ட்மென்ட் வாசல்ல வந்து நின்றது. யாரா இருக்கும்-னு பாக்குறப்போ சஞ்சய் முன் சீட்ல இருந்து இறங்கினான். கூடவே மொத நாள் அவன் ஆஃபிஸ்-ல பார்த்து பேசிட்டு இருந்த பொண்ணும் இறங்கிச்சு. அவ போட்டிருந்த ட்ரெஸ் தூங்கி எழுந்து அப்படியே வந்த மாதிரி இருந்துச்சு. உறையிர குளிரிலும் கவர்ச்சியா இருந்தா. இவ்ளோ ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்கத்தான் செய்தது. இவன் அவ காதுல ஏதோ சொன்னான். அதுக்கு இவ கெக்க பிக்க னு பல்ல காட்டினா. திடீர்னு இவன் அவள இழுத்து புடிச்சு ஒரு செக்கென்ட் ல கமலஹாசனா மாறிட்டான். டேய் நடூ ரோடுடா எவனாச்சும் பாத்தா அசிங்கம்டானு உள்ளுக்குள்ள திட்டினேன். அவன் மேல அக்காராயோ மண்ணாங்கட்டியோ இல்லை. நானும் ஒரு சராசரி சம்சாரி தான். என்னால முடியல. அவனால முடியுது. லீகலோ இல்லீகலோ. வெந்ததோ வேகாததோ, அவனுக்குன்னு ஒரு துணை இருக்கு. எனக்கு இல்லை. என் மனம் ஏங்குவதில் என்ன தவறு? ஆஃப்ஷோ ருல பண்ணினத விட ரொம்ப பெட்டராவே பண்ணுறடா. "ரொம்ப நல்லா பண்றீங்க தம்பி" னு கரக்காட்டகாரன் சண்முகசுந்தரம் மாதிரி எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். பிராஜெக்ட் உருப்பட்ட மாதிரி தான்-னு புரிஞ்சுது

சில மாதங்களுக்கு அப்பால்
"கொடுமை கொடுமை னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை..." ங்ர கதையா ஓட லீலைகள் எனக்கு என் குடும்பத்த ரொம்பவே மிஸ் பண்ண வச்சது. சரி ஊருக்கு பொயாச்சும் எல்லாரயும் பாத்துட்டு வரலாம் னு லீவ் கேட்டா வழக்கம் போல ரிஜெக்ட் பண்ணிட்டான் வெள்ளக்காரன். என்னோட வீக் எண்ட்ல கூட வெளில சுத்தாம ரூம்லயே அடஞ்சு கிடந்தேன். சாட் மற்றும் வெப்கேமரா உதவியோட என் குடும்பத்தோட குதூகலமா இருந்தேன். என்ன பொழப்புடா இது னு அடிக்கடி தோணும். பட் வந்த அப்றோம் தான் தெரியுது இது எல்லாம் வெறும் கானல் நீர்!!!
சுபா ஒரு அழகான பெண் குழந்தைய பெற்றெடுத்தாள். மைதிலியின் பெயர் சூட்டு விழா யாஹூ கடவுளின் அணுகிரனையுடன் இனிதே நடந்து முடிந்தது. சுபா மைதிலியின் புகைப்படம் மற்றும் குரலையும் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தாள். சுப்ரபாதம் தருவதை விட மன நிறைவை தந்தது அவளின் குரல். ஓருவழியா வெள்ளக்காரன் கைல கால்ல விழுந்து இந்தியா போக பெர்மிஷன் வாங்கினென்.

6 மாதங்களுக்கு அப்பால்
அண்ணா பண்ணாட்டு விமான நிலையம், மீனாம்பாக்கம்
முதல் காதல்; முதல் முத்தம்; முதல் ஸ்பரிசம்; எல்லாமே இனிமைதான். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நான் சுவாசித்த அந்த மாசுபட்ட சென்னை காற்றும் கூட ஒருவிதத்தில் அதே போன்றது தான். முன்னாடி இருந்தத விட இப்போ இன்னும் கெவலமாவே இருந்துச்சு. பட் புடிச்சிருந்தது. சுபா என்ன தூரத்துல இருந்தே பாத்துட்டே ஒரு கைல ராஜீவயும் இடுப்புல மைதிலியயும் தூக்கிட்டு ஸ்லோ மொஷன்ல இல்லாம கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் ஆக்க்ஷன் ல ஓடி வந்தா. என்ன பார்க்காம இழைத்திருப்பா னு நெனச்சேன். பட் இல்லை!!! முன்னாடி இருந்தத விட நல்லா பூசினாப்பில இருந்தா.
சுபா கொஞ்சம் லைட்டா மூச்சு வாங்கி முடிச்சுட்டு என் கண்களை உற்று நோக்கினாள். காதல், பிரிவு, ஏக்கம், கோபம், அழுகை என பெண்மைக்கே உரித்தான அனைத்தயும் வெளிப்படுத்தினாள். ராஜீவ் என்ன தூக்க சொல்லி கை ரெண்டயும் தூக்கினான். அவனை அப்படியே தூக்கி முத்தமழை பொழிந்தேன். மைதிலி கொஞ்சம் பயம் கலந்த முகத்தோட சுபா தோள்ல முகம் புதைத்துக்கொண்டாள்.நான் ராஜீவ இறக்கி விட்டுட்டு சுபா கிட்ட இருந்து மைதிலிய வாங்க முற்பட்டேன். அவ வீல்னு அழ துவங்கிட்டா. யார்லாமோ சமாதானம் பண்ணி பாத்தோம். ஆனா சுபாவா இருக்கமா கட்டின்டு வரமறுத்தாள். என் மாமனார் கொஞ்சம் மங்கீ ட்ரிக்ஸ் லாம் கூட ட்ரை பண்ணி பார்த்தாரு. எதுவும் வேலைக்கு ஆகல. "மாப்பிள்ளே... எல்லாம் ஒரு ரெண்டு வாரத்துல சரி ஆகிடும். நீங்க கவலப்படாதேள்" னு என் மாமனார் என்னை கன்ஸோல் பண்ண ட்ரை பண்ணினார். காசு மட்டுமே வாழ்க்கை ஆகாதுனு புரிஞ்சுது. ஆன்ஸைட் வெறும் மாயை. அதுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை துளைத்தவர்கள் ஏராளம். அதில் நானும் சேர்ந்தது கஷ்டமாக இருந்தது. காசு குடுத்தாலும் நான் இழந்த சந்தோஷத்தை திரும்ப பெற முடியாதுனு உணர்ந்தேன். என் மகளுக்கே அவளோட அப்பாவ தெரியாம இருக்குறத விட என்ன கொடுமை இருக்க முடியும்? சுபா ஆதரவா என் தோளை தட்டினாள். நான் வாழ்க்கையை துலைத்து சம்பாதித்த தட்டு முட்டு சாமானொடு ஏர்‌போர்ட்ட விட்டு வெளில வந்தோம்.
எக்ஸிட் கேட்டுக்கு வெளில வச்சிருந்த வோட்கா அட்வர்‌டைஸ்மெண்ட் போர்ட் ஒண்ணு கண்ணுல பட்டுச்சு. அதுல எழுதிருந்தது குடிகாரங்களுக்கு புரிஞ்சுதோ இல்லாயோ எனக்கு புரிஞ்சது

LIFE IS CALLING. WHERE ARE YOU??

உள்ளுக்குள்ள குமுறிக்கிட்டே நடைய கட்டினேன்

2 Comments:

At October 30, 2010 at 7:43 PM , Blogger Ponraj Ram said...

Hard truth!!! How many of us are rich enough not fall on this trap

 
At September 5, 2021 at 9:38 PM , Blogger Rammya said...

Yetharthamana kathai and well written

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home