Saturday, May 29, 2010

ஆன்சைட் ட்ரீம்ஸ்- 2

ஐந்தாம் வருடம், ப்ராஜெக்ட் ஏழு
"ஹே அர்ச்சனா...நேத்து அனுப்பின டாக்குமென்ட்ட ரிவ்யு பண்ணியா? ஆஃப்ஷோர் டீம்-க்கு எதாச்சும் ரிவ்யு கமெண்ட்ஸ் இருக்கா? நேத்து அனுப்பின ஸ்டேட்‌டஸ் மெயில்-க்கும் நீ ரிப்ளை பண்ணலையே.."னு என்னோட O.S.C கிட்ட கால்-ல கேட்டேன்
"ஹே பட்டாபி...சாரி ட்யூட்...எனக்கு சுத்தமா டைம் இல்லடா Docs-அ ரிவ்யு பண்ண...ஏகப்பட்ட கால்ஸ்..கிளையன்ட் மீட்டிங்...நேத்து செம்ம கடுப்ப கேளப்பிடாங்க...ஒரு மொக்க கால்-ல அஞ்சு மணி நேரம் இருந்தேன்டா...படுத்துறாங்க..."னு சொன்னா
"அர்ச்சனா எனக்கு உன் நெலமை புரியுது...ஆனா இன்னும் சில Docs நாலு அஞ்சு நாளா Signoff ஆகாம இருக்கு...நம்ம ஆஃப்ஷோர் PM ஸ்டேட்டஸ் கேட்டுட்டே இருக்காரு...நான் என்ன பதில் சொல்றது சொல்லு...ஆன்சைட்டும் ஆஃப்ஷோரும் ஏன் Sync-ல இல்ல-னு கேக்குறாரு...Docs லாம் Signoff ஆகாம இருக்குன்னு சொல்ல கஷ்ட்டமா இருக்கு....ஏன்னா நீ என்னோட நல்ல ஃபிரண்டு அண்ட் Colleague...ஒரு காங்கிரீட் டேட்டு சொல்லு என்னைக்கு முடியும்னு....நான் எவ்ளோ தான் சமாளிப்பேன்...?"னு கேட்டேன் அவகிட்ட
"பட்டாபி...ஆன்சைட்-னா சும்மா இல்லை... அது ஒரு முள்கிரீடம்....அத அனுபவிச்சு பாத்தா தான் அதோட வலி என்ன கஷ்ட்டம் என்னனு உனக்கு புரியும்..."னு ஏதோ முதல்வன் படம் ரகுவரன் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுத்தா
"ஆமா அர்ச்சனா...நீ சொல்றதும் சரிதான்...சரி ப்ரீ யா விடு...நான் அவர்கிட்ட எதாச்சும் சொல்லி சமாளிசுக்குறேன்...ஹே சொல்ல மறந்துட்டேன்...உன்னோட ஆர்க்குட்-ல நீ கலிபோர்னியா ட்ரிப் போட்டோஸ் லாம் அப்லோடு பன்னிருக்கல...சூப்பர்-ஆ இருந்துச்சு..."னு சர்காஸ்டிக்-ஆ சொன்னேன்
"ஹே நீ பாத்தியா....நல்லா இருக்குல்ல...அதுவும் அந்த டிஸ்னி லேன்ட் பிக்ஸ் லாம் செம்ம க்யூட்-ஆ இருக்கு பா...இன்னொரு டைம் போயிட்டு வரணும்...நல்ல வேளை ஞாபகபடுத்தின...பிகாசா-ல நான் அப்லோடு பண்ண மறந்துட்டேன்...என் பிரண்ட்ஸ் லாம் லிங்க் எங்கடி-னு என்ன போட்டு டார்ச்சர் பண்ணிடுவாளுங்க...தேங்க்ஸ் பட்டாபி..நீ கண்டிப்பா இங்க வந்தீன்னா நல்லா என்ஜாய் பண்ணுவ...யூ வில் லைக் இட் போர் சுயூர்..."னு பார்ன் அண்ட் பிராட் அப் இன் அமெரிக்கா சொல்லிச்சு
"ஹ்ம்ம் கண்டிப்பா...அத விட எனக்கு முக்கியமானா ஜோலி வேற என்ன இருக்குது ...என்ன ஆன்சைட் அனுப்பிட்டு தான் மறுவேலை பாப்பாங்க...டாக்ஸ்-அ ரிவியு பண்ண டைம் இல்ல...Pics-அ அப்லோடு பண்ண டைம் இருக்கு....பிரம்ம்ம்ம்ம்மாதம்"னு உள்ளுக்குள்ளயே குமுரிக்கிட்டேன்

ஆறாம் வருஷம், ஒன்பதாம் பிராஜக்ட்
"பட்டாபி...மேனேஜர் ஆகிட்ட...வாழ்த்துக்கள்..."னு என்னோட பாஸ் பாராட்டினார்...
என்னோட மனைவி மற்றும் குழந்தைய பத்தி விசாரிச்சார்
"சுபா நல்லா இருக்கா....ராஜீவ் நடக்க ஆரம்பிச்சுட்டான்...அக்சுவலா நல்லவே ஓடுறான்....ஒரு சில வார்த்தை பேசறான்....ஐ ஆம் ஹாப்பி ஓவரால்..."னு சொன்னேன்
"ரொம்ப சந்தோஷம் டா...முடிஞ்சா இந்த Weekend உன் வீட்டுக்கு வர்றேன்...நீயும் ரொம்ப நாளா கூப்டுட்டே இருக்க...சரி F.C போலாம்...எதாச்சும் வாங்கி குடு டா...மேனேஜர் ஆகிருக்க..."னு உரிமையோட கேட்டார்...நல்ல மனுஷன்...

Cubicle-ல வந்து உக்காந்து விட்டத்த பார்த்து கொஞ்சம் பழைய நினைவுகள அசை போட்டேன்...என் கல்யாணம்!!!

சுபா ரொம்பவே ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். Engagement முடிஞ்சதும் எல்லார போலவும் எனக்கும் என்னோட ஃபியான்சே கிட்ட போன்-ல கடலை போடணும்-ங்கற சராசரி ஆசை வந்துச்சு.
ஆனா முக்கியமான ரெண்டு விஷயத்தால அது நிறைவேறாமலே போய்டிச்சு.
ஒன்று: அவகிட்ட மொபைல் போன் இல்லை
ரெண்டாவது:அவ எதுக்கெடுத்தாலும் அப்பா கிட்ட கேக்கணும் ஆட்டுக்குட்டி கிட்ட கேக்கணும்-னு சொல்லுவா.சொந்தமா ஒரு முடிவு எடுக்க தெரியாது. கோலங்கள் மெகா சீரியல் பாக்குறதா இல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாக்குறதா-ங்கறதுக்கே அவங்க அப்பாரு கிட்ட பெர்மிஷன் கேப்பா...அவளோட அப்பாவும் கோலங்களே பாருமா-னு சொல்லிடுவாரு. இத கல்யாணத்துக்கு அப்புறம் பெருமையா வேற என்கிட்டே சொன்னா...அவ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துருந்தாலும் அவளோட பாட்டி அவள காலேஜ்க்கு படிக்க அனுப்பல...அவங்கள பொறுத்த வரைக்கும் அப்பன் காசு கேட்டுறது பையனோ பொண்னோ கெட்டு போறதுக்கு குடுக்குற விலை. ஆனாலும் ஒரு வழியா இவளோட பிடிவாதத்தால தொலைதூர கல்விக்கு ஓகே சொன்னாங்க. அவள நான் Engagement-கு அப்றோமா மோத தடவையா பாத்தது என்னோட கல்யாணத்துல. நான் வரதட்சணையா நயா பைசா கூட வாங்காம புரட்சிக் கல்யாணம் பண்ணினது மத்தவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ என்னோட மாமனார் காசு வாங்காம க்ளோஸ்-அப் Advertisement மாடல் மாதிரி பல்ல காட்டிட்டே இருந்தாரு கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துக்கு. ஆனா அந்த சிரிப்பு எனக்கு வைக்க போற பெரிய்ய ஆப்பு-னு எனக்கு அப்போ தோனல. எனக்கு கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி ரெண்டு ஆன்சைட் வந்து டிராப் ஆய்டுச்சு. சரி ஆன்சைட் தான் இப்டி டிராஜெடி-ல முடிஞ்சுருச்சு...ஹனிமூன் ஆச்சும் எதாச்சும் பாரின் Location-ல போய் குதூகலமா கொண்டாடலாம்னு நெனச்சு என் மாமனார் கிட்ட மொரிஷியஸ சஜெஸ்ட் பண்ணினேன்.
ஆனா அவரு ஊட்டிக்கு தான் போகணும் னு ஒத்தக்காலுல நின்னாரு.
"ஏன் மாமா...மொரிஷியஸ்க்கு என்ன கொறச்சல்"னு கேட்டேன்
"மாப்பிள்ள....மொரிஷியஸ் லாம் முன்ன மாதிரி இல்ல...ஏகப்பட்ட கொலை,கொள்ளை,அட்டூளியம் லாம் நடக்குது...என்னோட சிநேகிதன் ஒருத்தனோட பையன் போன மாசம் தான் அங்க போயிட்டு வந்தான்...ரூம் சர்வீஸ் லாம் படு கேவலமா இருந்துச்சாம்...பொலம்பிட்டு இருந்தான்...ஊட்டி அப்படி இல்ல மாப்பிள்ள...என்ன அவசரம்னாலும் நாங்கல்லாம் இங்க இருக்கோம்...சோ ஊட்டி தான் மாபிள்ள பெஸ்ட்" னு ஒரு புது பூகம்பத்த உருவாக்கினாரு
"உங்க ஹனிமூனுக்கு மொரிஷியஸ் தான் போனீங்களா மாமா"னு அவர்கிட்ட கேட்டேன்
"எனக்கு அந்த குடுப்பினை இல்லாம போய்டிச்சு மாபிள்ள....என்னோட மாமனார் ஹனிமூனுக்கு ஏற்பாடு பண்ணவே இல்லை...நானும் என்னோட ஆத்துக்காரியும் ஸ்ரீரங்கம் போயிட்டு ரங்கனாதர தரிசிச்சிட்டு வந்தோம்...அதுவும் என்னோட சொந்த காசுல...எனக்கும் அவளுக்கும் போக வர ஏழு ரூபா அறுபது காசு. ஆனா நீங்க கவல படாதீங்க மாபிள்ள...ஊட்டி போக வர்ற செலவு எல்லாம் என்னோடது...யு டோன்ட் வொர்ரி..நீங்க நயா பைசா செலவழிக்க வேண்டாம்"" னு பெருமை போங்க சொன்னாரு
இவரு மூலமா Flight-ல மொதல் தடவையா ஏறிடலாம்னு பாத்தா இந்த மனுஷன் இப்படி கவுத்துட்டாரே-னு உள்ளுக்குள்ளயே பொலம்பினேன்.வேற வழியே இல்லாம சரி-ன்னு ஊட்டி ட்ரிப்க்கு தலை ஆட்டி வச்சேன்.
ஒரு First கிளாஸ் கூப்பே புக் பண்ணுவாருன்னு பாத்தா நோர்மல் செகண்ட் ஸ்லீப்பர் கிளாஸ்ல எடுத்துருந்தார்...
"ஏண்டீ...First கிளாஸ்ல புக் பண்ண வேண்டாம்....அட்லீஸ்ட் ஒரு த்ரீ டயர் ஏசீ-ல யாச்சும் புக் பண்ணிருக்கலாம்ல...செகன்ட் கிளாஸ்ல போயீ புக் பண்ணி வச்சுருக்காரு...என்ன இளிச்சவாயன்னே முடிவு பண்ணிட்டீங்களாடி உங்க குடும்பத்துல எல்லாரும்?"னு சுபா கிட்ட எரிஞ்சு விழுந்தேன்
"அப்டி இல்லீங்க...First கிளாஸ்ல டிக்கெட் கிடைச்சிருக்காது....அதான் அப்பா இதுல புக் பண்ணிருப்பார்"னு சொன்னா
"யாரு உங்க அப்பாவா? தேர்ட் கிளாஸ்ல டிக்கெட்லாம் புல் ஆகிருக்கும்...அதான் செகண்ட் கிளாஸ்ல புக் பண்ணிருப்பார்...தேர்ட் கிளாஸ் டிக்கெட்-அ எவனாச்சும் பிளாக்ல வித்தான்னா அதையும் வாங்கிருப்பார்...அவ்ளோ பெரிய்ய மகாபுத்திசாலி உங்க அப்பா. நல்ல வேலை அப்படி ஏதாச்சும் செஞ்சு நம்ம ரெண்டு பேரையும் ஃபுட்போர்டு அடிக்க விடாம இருந்தாரே. அது வரைக்கும் சந்தோஷம்"னு இன்னும் எரிச்சலோட பேசினேன்
"உங்களுக்கு எங்க அப்பாவ பத்தி பேசலைனா தூக்கமே வராதா...ஹ்ம்ம்"னு சொல்லிட்டே கண்ணா கசக்க ஆரம்பிச்சுட்டா
ஊட்டி ஹோட்டல்க்கு போயும் அவளோட அழுகை நிக்கவே இல்லை...அப்றோம் ரூம்க்கு வெளில மழை பெஞ்சது.. .அழுகை ஆடோமடிக்கா நின்னுடிச்சு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home