Saturday, May 29, 2010

ஆன்சைட் ட்ரீம்ஸ்- 1

ஒரு சாப்ட்வேர் எஞ்சினியரின் வாழ்வில் மகிழ்ச்சியை தருவது எது?

டீம்மேட்டின் காதல் ப்ரோபோசல்-ஆ?
கம்பெனி இல் வேலை பார்க்கும் பெண் அனுப்பின டேட்டிங் இன்வைட்-ஆ?
சம்பள உயர்வா?
கல்யாணம் நிச்சயம் ஆவதா?

இதை எல்லாம் விட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது ஆன்சைட்-ஐ விட வேறு எதுவாகவும் இருக்க முடியாது
என் பெயர் பட்டாபிராமன். நான் என் அலுவலகத்தில் ஃப்ரெஷ்ஷர் ஆக வேலைக்கு சேர்ந்து இப்பொழுது ஆஃப்ஷோர்-ல் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக பொழப்பை ஓட்டிகொண்டிருக்கிறேன்
வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே எனக்கு ஆன்சைட் போக வேண்டும் என்ற வெறி கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது. வேலையில் சேர்ந்த முதல் நாள் இன்னும் எனது நெஞ்சுக்குள் பசுமரத்தாணி போல் பதிந்து கிடக்கின்றது

முதல் நாள், ஃப்ரெஷ்ஷர் இன்டக்ஷன்
"சார், இங்க எனக்கு ஏதாவது ஆன்சைட் ஆபர்சுநிடீ இருக்குமா?" என்று இண்டக்ஷன் நடத்தியவரிடம் கேள்வி எழுப்பினேன்
"உங்க பேர கொஞ்சம் சொல்றீங்களா" என்று அவர் கேட்டார்
"பட்டாபிராம் சார்" என்று நான் கூறினேன்
"இங்க பாருங்க பட்டாபி. இங்க நீங்க ரெண்டு விஷயம் நோட் பண்ணனும். ஒன்னாவது: இங்க என்னையோ இல்ல வேற யாரையோ சார் மோர்-னு லாம் கூப்ட கூடாது. அவங்களோட பெற சொல்லி கூப்பிடனும். இல்லைனா அவங்களோட நிக்நேம் எதாச்சும் வச்சு கூப்பிடுங்க
ரெண்டாவது:உங்களோட ஆன்சைட் ஆபர்சுநிடீ நீங்க போற ப்ராஜெக்ட்-அ பொறுத்து. இதுல நான் சொல்றதுக்கு ஏதும் இல்லை. இத நீங்க போக போக புரிஞ்சுப்பீங்க. இன்னைக்கு தானே முதல் நாள். இன்னும் டைம் இருக்கு"னு ரொம்ப கூல்-ஆ பதில் சொல்லிட்டு இன்டக்ஷனோட அடுத்த ஸ்லைட ஓட விட்டார். அதுக்கு அடுத்து அவர் சொன்ன எதுவும் என் காதுக்குள் ஏறவில்லை

முதலாம் வருடம், முதல் ப்ராஜெக்ட்
"ஹாய் குரு. இந்த ப்ராஜெக்ட்-ல எனக்கு எதாச்சும் ஆன்சைட் ஆபர்சுநிடீ இருக்குமா?" என்று என் ப்ராஜெக்ட் மேனேஜர் குரு-விடம் கேட்டேன்
"உன்ன பத்தி சொல்லிருக்காங்க. இன்டக்ஷன் முதல் நாளே ஆன்சைட் பத்தி கேட்டவன்-ல நீ? இப்போ தானே ப்ராஜெக்ட் குள்ள என்டெர் ஆகிருக்க. வெயிட் பண்ணு. உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்துக்கோ. இதுதான் கத்துக்குறதுக்கு சரியான டைம். சாப்ட்வேர்-ங்கறது ஒரு ஆழமான கடல். அதுல எல்லாராலையும் அவ்ளோ ஈஸீ-ஆ நீச்சல் அடிக்க முடியாது"னு அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு சிதம்பர ரகசியத்த எனக்கு மட்டும் சொல்லிட்டு எஸ் ஆகிட்டாரு

இரண்டாம் வருடம், மூணாவது ப்ராஜெக்ட்
"பட்டாபி இந்தா சாக்லேட் எடுத்துக்கோ டா" என்று என்னோட டீம்மேட் தீபக் என் முன்னாடி சாக்லேட் டப்பா வை நீட்டினான்
"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்" என்று மனாதார வாழ்த்தினேன்
"லூசா டா நீ. இன்னைக்கு என் பிறந்தநாள் இல்லை. நான் அடுத்த வாரம் ஆன்சைட் போறேன் டா மாப்ள. அதுக்கு தான் இந்த ஸ்வீட் எல்லாம்" என்று க்ளோஸ் அப் புன்னகை தவிழ சொன்னான்
காலங்காத்தால பல்பு வாங்கி அசடு வழிய அவன் குடுத்த சாக்லேட்-அ உள்ள தள்ளினேன்
"3500$ மாசா மாசம் தர்றாங்க மாப்ள. வாராவாரம் ஊரு சுத்தவேண்டியது தான். US ஃபுல்லா சுத்தி பாக்கலாம். வெள்ளக்காரிய சகட்டு மேனிக்கு சைட் அடிக்கலாம். லுஃப்தான்சா ஏர்வேஸ்... பிசினஸ் கிளாஸ்...பெருசா ஒன்னும் நாம கேக்க போறதில்லையே....என்ன மாப்ள நான் சொல்றது"னு என்கிட்டே சொன்னான்
"கரெக்ட் டா" என்று ஆமாம் போட்டேன் அவனுக்கு
"சரி டா...ஏகப்பட்டது பர்செஸ் பண்ணனும். திநகர்-கு போகணும்டா. நீயும் வர்றியா" நு கேட்டான்
"ஏன்டா நீ குதூகலமா இருக்குறதுக்கு நான் வெளக்கு புடிக்கணுமா?"னு மனசுக்குள்ள திட்டிட்டு ஏதோ சாக்கு சொல்லி தப்பிச்சேன்

மூணாவது வருடம், நாலாவது ப்ராஜெக்ட்
"பட்டாபி உடனே என் கியூபிகில்-கு வா...ஒரு முக்கியமான விஷயம்"ஆ என் ப்ராஜெக்ட் மேனேஜர் கால் பண்ணினார்
என்ன முக்கியமான விஷயம் முக்கின விஷயம்-னு குழம்பிட்டே அவரோட கியூபிகில்-கு போனேன்
"பட்டாபி நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஒழைக்கிற-னு எனக்கு புரியுது. லாஸ்ட் ரெண்டு வருஷமா நல்ல ரேட்டிங் லாம் வாங்கிருக்க. சோ உனக்கு இந்த டைம் ரோல் சேன்ஜ் குடுக்கலாம்-னு முடிவு பண்ணிருக்கோம். இன்னும் அபிசியல் கண்பார்மஷின் ஏதும் வரல. ஆனா 99 பெர்சென்ட் சூர்-ஆ கிடைச்சிடும்டா-னு இன்ப அதிர்ச்சி மூட்டினார்
"ரொம்ப ஹாப்பி-ஆ இருக்கு சந்தீப். ஆனா என்னோட ஆன்சைட் மேட்டர் என்ன ஆச்சு? நான் இந்த கம்பெனி ஜாய்ன் பண்ணி கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆக போகுது. எப்போ தான் என்னோட விசா இனிஷிஏட் பண்ண போறீங்க?"னு ஒரு சோக பார்வையோட அவர்கிட்ட கேட்டேன்
"உன்னோட நெலமை எனக்கு ரொம்ப நல்லா புரியுது பட்டாபி. ஆனா பொறுமை ஒரு மனுஷனுக்கு ரொம்பவே முக்கியம். உன் டைம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணு"னு அநியாயத்துக்கு ப்ரீ அட்வைஸ்-ஆ அள்ளி விட்டாரு
நான் உத்தரவு வாங்கிட்டு கெளம்பிட்டேன்

நாலாவது வருடம், அஞ்சாவது ப்ராஜெக்ட்
"ஹே தீபா. நீ போனவாரமே US போக வேண்டியவள் ஆச்சே...இங்க என்ன இன்னும் பண்ணிட்டு இருக்க?"னு என் ப்ராஜெக்ட் மேட்ஐ கேட்டேன்
"இல்ல பட்டாபி... நான் ஆன்சைட் போகல.நம்ம PM கிட்ட ஸ்ட்ராங்-ஆ சொல்லிட்டேன்"னு சந்தோஷாமா சொன்னா
"ஆன்சைட் போகலையா? லூசா நீ? இப்டி ஒரு சூப்பர் ஆபர்சுநிடீ-அ மிஸ் பண்ணலாமா? "னு கேட்டேன் அவகிட்ட
"இல்ல பட்டாபி. உண்மைய சொல்லணும் நான் ஆன்சைட் போறதுல என் பாய்பிரண்ட்-கு சுத்தமா இஷ்டமே இல்ல பா"னு பட்டாம் பூச்சிகள் பல படபடக்க மின்மினி பூச்சுக்கள் ஜோலிஜோலிக்க கண்ணா சிமிட்டிடே சொன்னாள்
"ஆனா உன்கிட்ட H1B விசா இருக்கே. எங்களுக்குலாம் விசா கிடைகிறதுக்கே மண்டை காயுது. அவன் அவன் ஆன்சைட் போறதுக்கு தவம் கெடக்குறான்... நீ என்னடான்னா போக இஷ்டம் இல்லைனு கூலா சொல்ற...நானா இருந்தா கண்டிப்பா போய்ருபேன்"னு சொன்னேன்
"நீ சொல்றதுலாம் கரெக்ட் தான் பட்டாபி. ஆனா அவன் சொல்ல என்னால மீற முடியல. எனக்கு எல்லாத்தயும் விட அவன் தான் முக்கியம் இல்லையா"னு ஒரு சோக பார்வைல நெஞ்சை பிழிஞ்சா
"ஆனா நீ இத நம்ம PM விசா இனிஷிஏட் பன்றபோவே சொல்லிருக்கலாம் ல...அட்லீஸ்ட் வேற ஒருதருகாச்சும் ஆன்சைட் போற சான்ஸ் கிடைச்சிருக்கும்...இப்போ நீயும் போகல...விசா-உம் வேஸ்ட்-ஆ போச்சு-ல?" ஒரு கடுப்புல உள்ள இருக்குறதெல்லாம் கொட்டினேன்
அதுக்கு அவ கேவலமா ஒரு லுக் விட்டுட்டு சொன்னா "எனக்கு அத பத்திலாம் கவலை இல்லை..கைல விசா இருக்கு...நான் நெனச்ச நேரத்துக்கு போயிப்பேன்...அதான் விசா இனிஷிஏட் பண்றோம் நு சொன்னதுக்கு தலைய ஆட்டி வச்சேன்"
"சோ உன் பாய்பிரண்ட் ஓகே சொன்னா போவ...வேணாம் நா போகமாட்ட...அவன கல்யாணம் பண்ணுறயோ பண்ணலயோ...கல்யாணம்-னு ஒன்னு நடந்துச்சுனா US போறதுக்கு யூஸ் பண்ணிக்குவ...கரெக்ட்-ஆ?"னு கும்டி அடுப்ப விட ஜாஸ்தியா எரியர என் அடிவயுத்துல இருந்து கேட்டேன்
ஒரு மொற மொறச்சுட்டு அப்ஸ்காண்ட் ஆகிட்டா

ஐந்தாம் வருடம், ஆறாவது ப்ராஜெக்ட்
"தீபா அண்ட் வெங்கட்...இந்தாங்க ரெண்டு பேரும் ஸ்வீட் எடுத்துகோங்க" என்று என் ப்ராஜெக்ட் மேட்ஸ் கிட்ட சாக்லேட் டப்பாவை நீட்டினேன்
"பட்டாபி...உன் முகம் இவ்ளோ பிரகாசமா இருக்கு...ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...ஆமா என்னைக்கு ஆன்சைட் போற"னு தீபா கேட்டா
"ஆன்சைட்-ஆ...? நானா?"னு சந்தூர் சோப்பு விளம்பர அம்மணி ரேஞ்சுக்கு கேட்டேன்
"அப்றோம் எதுக்கு சாக்லேட்"னு திருப்பி கேட்டாங்க
"எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு...அதுக்கு தான் இந்த சாக்லேட்"னு வெளக்கினேன்
"தூ...இவ்ளோதானா....நாங்க ஏதோ நீ ஆன்சைட் தான் போக போறியோ-னு லா நெனச்சோம்...பரவால வாழ்த்துக்கள் பட்டாபி"னு கொஞ்சம் மூஞ்சு மேல காரி துப்பி அப்றோமா தொடச்சுவிட்டாங்க
"ஆன்சைட் லாம் போய் என்ன மச்சி பண்ண போறேன்... கல்யாணம் பண்ணினோமா..பைக் பாஸ் ஒன்ன போட்டோமா...சீசன் டிக்கெட் எடுத்தோமா...ஜன்னல் சீட்ட புடிச்சோமா...ஆபீஸ் வந்து சேந்தோமா-னு இருக்கனும் டா...அங்க போய் நம்மால லாம் ரொட்டி பர்கர தின்னு உயிர் வாழ முடியாது...பொண்டாட்டி சமைச்சத கொண்டு வந்து சாப்புடுற சோகமே சோகம்...இத விட ஆன்சைட் லாம் பெருசா சொல்லு?...."னு உள்ளக்குமுறல அடக்கிகிட்டு வடிவேல் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுத்துட்டு கெளம்பினேன்

1 Comments:

At May 30, 2010 at 12:00 AM , Blogger Unknown said...

epdi da un story a ipdi ivlo azhaga ezhuthita da. ipo konjam baaaram kurainjiducha.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home