Saturday, May 29, 2010

ஆன்சைட் ட்ரீம்ஸ்- 5

ட்ராவெல் டேட்-க்கு முந்தைய தினம்

நான் ஆன்சைட் போறதுல எல்லாருக்குமே மகிழ்ச்சினாலும் சுபா முகத்துல என்னை பிரிஞ்சு இருக்க போறோமேங்கற வருத்தம் ப்ரொஜெக்டர், 70mm ஸ்க்ரீன் ஏதும் இல்லாமலே அப்பட்டமா தெரிஞ்சுது. சுபாவையும், ராஜீவையும் ஒண்ணா அழைச்சுட்டு போகணும்ன்னு ஆசை இருந்தாலும், இரண்டாவது முறையா என்னோட கருவை சுமந்திருக்கும் அவளையும், ஒரு வாரத்தில் ஸ்கூல்ல சேரப்போற ராஜீவையும் அழைச்சுட்டு போக என்னால் முடியவில்லை. எல்லாருமே வரிஞ்சுகட்டிக்கிட்டு Packing-ல மும்மூரமா இருந்தாங்க. என்னோட மாமனார் தான் சூப்பெர்வயிஸ் பண்ணிட்டு இருந்தார்.
"அந்த புளியோதரை மிக்ஸ், ரசப்பொடி, மாவுடு எல்லாத்தையும் கவனமா Pack பண்ணுமான்னு சுபா-க்கு ஆர்டர்ஸ் குடுத்துட்டு இருந்தார்"
உங்க ஆர்வத்த நான் ரொம்பவே பாராட்டுறேன் மாமா. ஆனா நான் இதல்லாம் எடுத்துட்டு போக முடியாது. கஸ்டம்ஸ்ல Allow பண்ணமாட்டா மாமா"ன்னு எடுத்து சொன்னேன்

அன்றைய இரவு நீண்ட இரவாக அமைந்தது

அண்ணா விமானநிலையம், மீனம்பாக்கம்
ஊரு சைடுல பொண்ணு எடுத்தா என்ன ஆகும்ன்னு நான் அன்றைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். என் கல்யாணத்துக்கு திரண்டுவந்திருந்த அதே கும்பல் என்னை வழிஅனுப்ப வந்திருந்தது. வர்றவன் போறவன் எல்லாம் ஏதோ அரசியல் கட்சி மீட்டிங் ஆ இல்ல பொதுக்கூட்டமான்னு சந்தேக கண்ணோடவே பாத்துட்டு போனாங்க. US-ல போய் எப்டி அட்ஜஸ்ட் பண்ணி வாழறதுன்னு அவன் அவன் அங்க இங்க செதரிக்கிடந்த தகவல்கள சொந்தக்கார பங்காளிங்கக்கிட்டயோ அக்கம்பக்கத்துலயோ விசாரிச்சுட்டு வந்து என்கிட்டே Re-Telecast பண்ணினாங்க.
அவ்ளோ நேரம் நல்ல கலகலப்பா பேசிட்டு இருந்த சுபா நேரம் போக போக மெகாசீரியல் ஹீரோயின் மாதிரி அழுகை கண்களின் ஓரத்துல எப்போடா எட்டி பாக்கும்ங்கற மாதிரி இருந்தா. நான் ஆறுதலா அவளோட கைய்ய புடிச்சு பேசிட்டு இருந்தேன். சஞ்சய் எனக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்னுட்டு இருந்தான். அவன வழியனுப்ப நிறையா பிரண்ட்ஸ் வந்துருந்தாங்க. அதுல ரெண்டே ரெண்டு பசங்க. மிச்சதுலாம் பொண்ணுங்க.
பிளைட் கெளம்பற டைம் வந்தது. எல்லாருக்கும் டாட்டா காமிச்சுட்டு செக் பாயின்ட்ட நோக்கி கெளம்பினேன்


ஜே.எஃப்.கே இண்டர்னேஷனல் ஏர்‌போர்ட், நியூயார்க் சிட்டி
ஒரு இனிய திங்கள் காலை வந்து சேர்ந்தோம். நியூயார்க் சிட்டி நிஜமாவே பாரவசப்பட வைத்தது. நியூயார்க் சிட்டி-னு இல்லை. இருண்ட ஆப்பிரிக்கா-ல ஆன்ஸைட்-னா கூட கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு போயிருப்பேன்.வந்த விருந்தாளிய வரவேற்கிறத விட்டுட்டு என்னத்துக்கு வந்தீங்க னு வெள்ளக்காரி கவுண்ட்டர் ல விசாரிச்சா. உன் நாட்டுக்கு வருமானம் ஈட்டத்தான் நாங்க ரெண்டு பேரும் வேலை மெனக்கெட்டு வந்தோம்னு சொன்னேன். அவ சிரிச்சுக்கிட்டேஎங்க ரெண்டு பேரோட பாஸ்‌போர்ட்டயும் போறட்டி பாத்தா. அப்போ பார்த்து இந்த சஞ்சய் பயபுள்ள மச்சி இவ செம்ம ஃபிகர் டா-னு சொன்னான் என் காதுல எனக்கு மட்டுமே கேக்குற ட்டோன்ல. மவனே அவளுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சுது உன்ன குப்புற படுக்கப்போட்டு மிதிக்க போறா னு சொன்னேன்.அதுக்கும் பல்ல காட்டினான் வெக்கமே இல்லாம. உனக்குலாம் எவன்டா விசா ப்ராஸெஸ் பண்ணினது-னு உள்ளுக்குள்ள குமுறிக்கிட்டேன். ஓருவழியா நம்ம ஊரு ஆட்டோ ஓட பெரிய ஸைஸ் வெர்ஷன் மாதிரி இருக்குற மஞ்சள் கலர் டாக்ஸிய புடிச்சு எங்க அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home