Saturday, May 29, 2010

ஆன்சைட் ட்ரீம்ஸ்- 3

ஒரு வருடத்திற்கு பின்பு, இன்றைய தினம்
பழசெல்லாம் மறக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க...ஆனா எனக்கு நெனச்சு பாக்க சுத்தமா புடிகல....ஏதோ பழைய நினைவுகள்...ஆனா இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டே...ஏன்னா...என்னோட டிராவல் டேட் பத்தி இன்னைக்கு தான் என்னோட பாஸ் என்கிட்டே கன்பார்ம் பண்ணி சொன்னாரு...காலைல இருந்து தல கால் புரியாம சுத்திட்டு இருக்கேன்...சுபா-க்கு போன் பண்ணி சொல்லலாம்னு நெனச்சேன்...பட் நேர்ல சொல்லி சந்தோஷ படறதே தனி அலாதி...ஒரு தனி சந்தோஷத்தோட ஆபிஸ் ல இருந்து ரிடர்ன் ஆகறது வலைக்கு செந்த அப்றோம் இன்னைக்கு தான் முதல் தடவை...

மின்சார ரயிலின் கோய்ய்ய்ன்ன்ன்ன்ன்ன் சத்தம் சத்தம் என்னோட ஸ்டேஷன் வந்தத நினைவு படுத்தி எழுப்பி விட்டுச்சு...கங்காரூ அதோட குட்டிய
வச்சுக்குற மாதிரி லேப்டாப்ப தூக்கி தோளுல போட்டுட்டு சின்ன கவுண்டர் விஜயகாந்த் மாதிரி பைக் ஸ்டாண்ட்-அ நோக்கி நடந்தேன்

இனிய இல்லம்
"சுபா.." உற்சாகமா வீட்டுக்குள்ள என்டெர் ஆனேன்
சுபா அவளுக்கே உரித்தான அந்த டிரேட்மார்க் புன்னகையோட வரவேற்றாள்
"என்ன விஷயம்? ஒரே உற்சாகமா இருக்கீங்க?"ன்னு கேட்டா
"பலவருஷமா கிடைக்காம இருந்தது இன்னைக்கு கெடைச்சுருக்கு"ன்னு பீடிகை போட்டேன்
அவள் என்னன்னு புரியாமல் முழித்தாள்
"ஆன்சைட் போறேன் டி"ன்னு உற்சாகமா சொன்னேன்
அவள் என்னை ஆரத்தழுவி கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்
"விசா இன்னும் வரலை...ஆனா ஆன்சைட் போற தகவல மட்டும் என்னோட பாஸ் இன்னைக்கு சொன்னாரு...எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள போய்டலாம்"ன்னு சொன்னேன்
அவள் என்னோட மார்புல சாஞ்சுகிட்டே கேட்டுட்டு இருந்தாள்
"என்னங்க இன்னொரு சந்தோஷமான விஷயம்"ன்னு ஆரம்பிச்சாள்
"என்ன விஷயம்"ன்னு கேட்டேன்
"ஊர்ல இருந்து அம்மா, அப்பா, தம்பி மூணு பேரும் இன்னைக்கு சாயங்காலம் கெளம்பி இங்க வந்துட்டு இருக்காங்க"ன்னு சந்தோஷமா சொன்னாள்
அவளுக்கு தல கால் புரியல...எனக்கு என்ன பண்றதுனே வெளங்கல
"இப்போ எதுக்கு இங்க வர்றாங்க? உங்க அப்பா சங்காத்தமே வேணாம்ன்னு தானே ஒதுங்கி இருக்கேன்..."ன்னு கொஞ்சம் கோபமாவே பேசினேன்
"அவங்களுக்கு நம்ம ராஜீவ பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்காம்...அது மட்டும் இல்லாம நம்பளலாம் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சுல...மூர்த்தி கூட நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நம்மள பார்க்கல...அதாங்க"ன்னு சாக்கு போக்கு சொன்னாள்

எனது இல்லம்
இரண்டு வாரத்துக்கு அப்பால்
விசா இன்டெர்வியு அன்று காலை
"மாபிள்ள...எல்லாம் ரெடியா...? நாம கெளம்பலாமா"ன்னு எனக்கு பின்னாடி ரொம்ப க்ளோஸ்-ஆ ஒரு குரல் கேட்டுச்சு
என் மாமனார் நின்னுட்டு இருந்தார்
"எல்லாமே ரெடி தான் மாமா...ஆனா எங்க கெளம்பலாமான்னு கேக்குறீங்க?"ன்னு கேட்டேன்
"உங்களுக்கு எப்பவுமே தமாஸ் தான் மாப்ள...விசா ஆபிஸ்க்கு போக வேண்டாமா...இன்னைக்கு உங்க விசால ஸ்டாம்ப் ஓட்டுவாங்களே"ன்னு அறிவியல் பூர்வமா சொன்னார்
"மாமா அதுக்கு பேரு விசா ஆபிஸ் இல்ல... U.S கான்சுலெட். ஸ்டாம்ப்ன்னா நோட்ல ஓட்டுற ஸ்டாம்ப் இல்ல மாமா...அது எப்படினா...அது உங்களுக்கு புரியாது மாமா...விடுங்க"ன்னு சொன்னேன்
ஆமா மாப்ள....முன்னபின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்...சரி டைம் ஆய்டுச்சு கெளம்பலாம்"ன்னு பரபரப்பானார்
"நீங்கல்லாம் என்னோட வர்றேளா என்ன?"ன்னு எல்லாரையும் பார்த்து ஒரு லுக் விட்டேன்
"ஆமா மாபிள்ள...நான், பாக்யம், மூர்த்தி, சம்பந்தி எல்லாருமே ரெடி ஆயிட்டு இருக்கோம்"ன்னு பல்லக்காட்டினார்
"மாமா இது என்ன எக்ஸ்கர்ஷனா? எல்லாரும் போறதுக்கு? அங்க என்ன மட்டும் தான் மாமா உள்ள விடுவா...நீங்களெல்லாம் என்ன பண்ண போறேள் அங்க வந்து?"ன்னு கேட்டேன்
என்னோட தோப்பனார் ராகவன் சடேன்னா என்ட்ரி குடுத்தார்
"டேய் பட்டு...நாமெல்லாம் இன்டெர்வியுக்கு போறதால ஆத்துல ஏதும் சமைக்கலடா இன்னைக்கு வெளிலயே சாப்ட்டுக்கலாம்ன்னு நெனச்சுண்டு"ன்னு சொன்னாரு
அடுப்படிக்குள்ள போகாம இருக்க புதுசு புதுசா என்னலாம் கண்டுபுடிக்கிறா
"சரி இதுக்கெல்லாம் மூல காரணம் யாரு...யாரு இந்த ஐடியா குடுத்தது"ன்னு எல்லாரையும் பார்த்து கேட்டேன்
"நான் தான்-டா சொன்னேன்"ன்னு பெருமை பொங்க என் தோப்பனார் என் அம்மாவை பார்த்தார்
"சரி...அது எல்லாம் இருக்கட்டும்...ஒரு விஷயம் கவனிக்க விட்டுட்டேளே...என்னோட WAGON-R ல அஞ்சு பேருக்கு மேல போக முடியாதே...நாம மொத்தம் ஏழு பேரு இருக்கோமே....எப்டி போறது?"ன்னு மடக்கினேன்
"அதுக்கும் நான் ஏற்பாடு பண்ணிட்டேன் மாப்ள"ன்னு என்னோட மாமனார் கைல சிக்கரி கப் காஃபி-அ உறிஞ்சுட்டே என் பக்கத்துல வந்தார்
"என்னோட சிநேகிதன் ஒருத்தன் மீனம்பாக்கத்துல டிராவல்ஸ் ஒன்னு வச்சுருக்கான்...நேத்தே அவன்கிட்ட போன் பண்ணி புக் பண்ணிட்டேன் மாப்ள...QUALIS வெளில தான் நிக்குது"ன்னு ஏதோ பதினெட்டு பட்டிக்கும் தீர்ப்பு சொல்லிட்டு கெளம்பற மாதிரி போஸ் குடுத்தார்

நுங்கம்பாக்கம் ஹைரோடு
"என்னங்க...என்னைக்கும் இல்லாம இன்னைக்குன்னு பார்த்து ட்ராஃபிக் கொஞ்சம் அதிகமாவே இருக்குல" என்னோட மனைவிக்கு என்னோட B.P-ய ஏத்தணும்ன்னா அலாதி பிரியம்
"இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்....சீக்கிரம் கெளம்பலாம் சீக்கிரம் கெளம்பலாம்ன்னு...யாராச்சும் கேட்டேளா?"ன்னு கொஞ்சம் ஆவேசப்பட்டேன்
"மாப்ள...ஏன் இப்படி டென்ஷன் ஆரேள்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது...எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...யு டோன்ட் வொர்ரி...எவிரித்திங் வில் பி ஆல்ரைட்"ன்னு மேஜர் சுந்தர்ராஜன் ரேஞ்சுக்கு இங்கிலீஷ்லயும் தமிழ்லயும் மாறி மாறி அட்வைஸ்-அ வண்டி வண்டியா அள்ளி தெளிச்சாறு
"வாவ்...வாட் அன் ஐடியா சர்-ஜி...செத்த நேரம் சும்மா இருங்கோ மாமா...நானே கடுப்புல இருக்கேன்"ன்னு டைம் பீயிங்-க்கு அவரோட வாய அடச்சேன்
ஆனாலும் அவரோட இன்னொரு ப்ராடக்ட் சும்மா இருக்கல
"அத்திம்பேர்...டென்ஷன் ஆவாதேள்...ரிலாக்ஸ்டா உக்காருங்கோ"ன்னு என் மச்சான் மூர்த்தி அவன் பங்குக்கு சொற்பொழிவு ஆற்றினான்
"டிரைவர் கொஞ்சம் வேகமா ஓட்றியா பா...இவ்ளோ ஸ்லோவா போனா எப்போ தான் பா போயி சேருறது"ன்னு டிரைவர் மேல ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டினேன்
"நான் வேகமா தான் சார் போறேன்...நான் இன்னா ஃபிளைட்டா ஓட்டறேன்...இது தம்மாதுண்டு கார் சார்...50க்கு மேல இந்த ட்ராஃபிக்ல நான் எப்பிடி சார் போறது...."ன்னு டிரைவர் அவன் பங்குக்கு கொஞ்சம் கேவலபடுத்தினான்
"சார் டீசல் போட்டுக்கறேன் சார்"ன்னு என் பதிலுக்கு வெயிட் பண்ணாமலேயே ரைட்ல இன்டிக்கேட்டர பயபுள்ள போட்டுட்டான்
என்னாங்கடா ஆச்சு உங்களுக்கெல்லாம் இன்னைக்கு...இங்க ஒரு அடிமை சிக்கிருக்கான்னு ஆளாளுக்கு அடிக்கிறீங்களா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home