ஆன்சைட் ட்ரீம்ஸ்- 4
US கான்சுலேட், 9:45AM
என்னோட மொபைல் மற்றும் ஒத்த ரூவா ரெண்டு ரூவா காயின்-அ எல்லாம் எடுத்து சுபா கிட்ட குடுத்துட்டு உள்ளார என்டர் ஆறதுக்கு ரெடி ஆனேன். என் மாமனார் என்ன பார்த்து ஆள்க்காட்டி விரலையும் நடூ விரலையும் சேர்த்து V ஷேப்ல விக்டரி சிம்பல்-அ காட்டினார் அவ்ளோ ரணகளத்துலயும். எனக்கு கோபம் தலைக்கு ஏறி ஆள்காட்டி விரல்-அ மடக்கி நடூ விரல மட்டும் காட்டலாம்ன்னு தோணிச்சு...சரி மாமனாராச்சேன்னு அடக்கிக்கிட்டேன்
மூர்த்தி என்கிட்ட வந்து "பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை அத்திம்பேர்...இன்டர்வியு குவெஸ்டின் லாம் ஆறாம் கிளாஸ் பய்யன் கூட ஆன்ஸர் பண்ற அளவுக்கு ரொம்பவே ஈஸீ-ஆ இருக்கும்"ன்னு குவெஸ்டின் பேப்பர்-அ அவுட் பண்ணின ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுத்தான்
உங்க குடும்பத்துல எல்லாருமே இப்படித்தானாடீ? நீ மட்டும் எப்படி தப்பி பொறந்த"ன்னு அவளுக்கு மட்டும் கேக்கற டோன்-ல கேட்டேன்
சுபா ஒரு வழியா என்ன சமாளிச்சு உள்ள அனுப்பி வச்சா.
கான்சுலேட் குள்ள போக போக என்னோட இதயம் பலம்மா அடிக்க ஆரம்பிச்சது
என்ன மாதிரியே நிறையா பேரு நிறையா கனவுகளோட லைன்ல நின்னுட்டு இருந்தாங்க. இதெல்லாம் பாக்கறப்போ ஏதோ கோயில் கொடைக்கு ஆட்டுக்கு மாலை போட்டு மஞ்ச தண்ணி ஊத்தி குனிய வச்சு கப்புன்னு வெட்ற மாதிரி இருந்துச்சு. ஒரு அஞ்சாறு கவுன்ட்டர் இருந்துச்சு. ஒன்னொன்னுலையும் ஒவ்வொரு வெள்ளைக்கார பங்காளி உக்கந்துருந்தான். ஒரே ஒரு கவுன்ட்டர்-ல மட்டும் நல்ல செகப்பு கலர் டிரஸ் போட்டு வெள்ளக்காரி இருந்தா. எனக்குன்னு ஒதுக்கப்பட்ட கவுன்ட்டர்-ல எனக்கு முன்னாடி ஒருத்தான் இன்டர்வியு அட்டென்ட் பண்ணிட்டு இருந்தான். அப்படி என்னதான் பேசிக்கிறாங்கன்னு என்னோட காத தூக்கி அவனோட வாய் பக்கத்துல போட்டேன்...நல்ல தெளிவாவே விழுந்துச்சு. அவன் வேற ஒரு கம்பெனில இருந்து வந்துருப்பான் போல...ஏதோ தப்பா சொல்லிட்டான்...வெள்ளக்காரன் ஒத்துக்கல...இவன் ஏதேதோ சமாளிச்சு பார்த்தான்...எதுமே வேலைக்கு ஆகல...கடசீல REJECTED ன்னு ஒரு சீல்-அ குத்திபுட்டான். எனக்கு அத பார்த்து பகீர்ன்னு ஆய்டுச்சு. இவன் வீட்டு கொழாயில தண்ணி வரல...பொண்டாட்டி சமச்சதுல உப்பு இல்ல-ங்ரதுக்காகலாம் விசா ரிஜெக்ட் பண்ணுவானான்னு யோசிச்சேன்.
அந்த பைய்யன் ஏதேதோ போலம்பிக்கிடே போய்ட்டான். அடுத்து என்னோட டாகுமென்ட்-அ குடுத்தேன்...உள்ளுக்குள்ள மாரியாத்தா காளியாத்தா-க்கு படையல் வைக்கிறேன்ன்னு லாம் வேண்டிக்கிட்டேன்.
வெள்ளக்கார பங்காளி கேள்வி கேக்க ஆரம்பிச்சான்
"எதுக்கு கண்ணு அமெரிக்கா போற?"
"ஆபிஸ் விஷயமா"
"அமெரிக்கால எங்க கண்ணு தங்க போற?"
"நியூயார்க்ல"
"எவ்ளோ நாளு கண்ணு தங்குவ?"
"ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ...ரேகொயர்மென்ட்-அ பொருத்தது"
"நீ அமெரிக்கா போயி பாக்க போற சோலிய ஆப்சோர் ல உக்காந்துட்டே கழட்ட முடியாதா? அமெரிக்காவே தான் போகனுமா"ன்னு ஒரு கொக்கி போட்டான்.
"இல்ல அங்க போயி பாத்தா கிளையன்ட் கேட்க்கிரத விட இன்னும் பெட்டெர்-ஆ பண்ணலாம்...அமெரிக்காவுக்கும் வருமானம் ஈட்டின மாதிரி இருக்கும்"ன்னு ஒரு பிட்ட போட்டேன்
"உன்ர சோலிய பத்தி கொஞ்சம் வெலாவரியா சொல்லு கண்ணு"
"நான் தான் மெயின் ரிசோர்ஸ். நான் இல்லனா ஆல் கோடிங் உம் மொடக்கமாயிடும்"ன்னு காதலர் தினம் கவுண்டன் ரேஞ்சுக்கு ஒரு பத்து நிமிஷம் பேசினேன்....பார்ட்டி கன்வின்ஸ் ஆயுடுச்சு"
"வெல்க்கம் டு அமெரிக்கா கண்ணு"ன்னு ரத்தினச்சுருக்கமா முடிச்சான்
அப்ரூவ்ட்ன்னு ஒரு ஸ்டாம்ப்-அ குத்திட்டு ஒரு சிரிப்பை வைத்தான். நான் பதிலுக்கு சிரிச்சுட்டு பாஸ்போர்ட் கம்பெனிக்கு வர ஒரு வாரம் ஆகும்ங்கற நியூஸ்-அ வாங்கிட்டு வெளில வந்தேன்
சங்கீதா ரெஸ்டாரன்ட், நுங்கம்பாக்கம், 1:15PM
"மாப்ள நீங்க இன்டர்வியுவ ஈசியா கிளியர் பண்ணிடுவீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்...நான் உங்ககிட்ட லாம் சொன்னேன்ல"ன்னு எல்லாரையும் பார்த்து கேட்டார் மாடர்ன் நாஸ்ட்ராடமஸ்.
எல்லாரும் நல்ல பசி மயக்கத்துல இருந்ததால அவர அவ்ளோ சீரியஸ்-ஆ எடுத்துக்காம சின்னதா ஒரு பல்பு குடுத்தாங்க
மறுநாள், என்னோட அலுவலகம்
""கங்க்ராட்ஸ் பட்டாபி...இன்னும் ஒரு வாரத்துல கெளம்ப வேண்டி இருக்கும்"ன்னு காலங்காத்தாலயே என்னோட பாஸ் இன்ப அதிர்ச்சி மூட்டினாறு
நன்றின்னு ஒரு புன்னகை வைத்தேன்
"உங்களோட சஞ்சய்-யும் டிராவல் பண்ணுவான்...நீங்க சஞ்சய்-அ பார்த்ததில்ல-ல...ஒன் மினிட்"ன்னு சொல்லிக்கிட்டே சஞ்சய்க்கு போன்-அ போட்டு அவர் கியூபிகில்க்கு வரச்சொன்னார்
கொஞ்சம் நேரம் கழிச்சு ஒருத்தன் உள்ள வந்தான்...நல்ல மூணு பன ஒசரம்...காதோரத்துல கடுக்கன்....மண்டைக்கு பின்னாடி பிளீச்ங்கற பேருல காக்கா ஏதோ பண்ணி வச்ச மாத்ரி ஒரு கலரு...டீ-ஷர்ட்ல ப்ரொவோக்கிங்கா ஏதோ ஒரு வாக்கியம்...தொவச்சு பலமாசம் ஆன மாதிரி ஒரு ஜீன்ஸ்...நல்ல ஜிம் பாடி வேற...
இவனா-னு ஆச்சர்யமா பாத்தேன். இவன நான் பலதடவ புட் கோர்ட், கேளிக்கை பில்டிங், ஆபிஸ் குள்ள இருக்குற மரத்துக்கு கீழ ன்னு நான் பார்க்காத இடமே இல்லை. ஆனா வாரம் ஒரு பொண்ணு கூட சுத்துவான்...எப்பிடித்தான் மெயின்டைன் பண்றானோனு நான் நிறைய வாட்டி ஆச்சர்ய பட்ருக்கேன்
எந்த பேசிஸ்ல ஆன்சைட் அனுப்புறாங்கனே எனக்கு சுத்தமா வெளங்கல...எனக்கு தெரிஞ்ச எத்தனையோ பேரு நல்ல வேல பாக்கறவங்க....மாடா ஒழைக்கிரவங்க இருக்காங்க....ஆனா அவங்கல்லாம் விட்டுட்டு எப்டி இவன மாதிரி ஆட்கள செலக்ட் பண்ணினாங்கனு எனக்கு பயங்கர ஷாக்...மே பீ அவங்களுக்குலாம் என்ன மாதிரியே சுழி சரி இல்லையோனு நெனைக்க தோணுது
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home