ஆன்சைட் ட்ரீம்ஸ்- 6
ஜே.எஃப்.கே இண்டர்னேஷனல் ஏர்போர்ட், நியூயார்க் சிட்டி
ஒரு இனிய திங்கள் காலை வந்து சேர்ந்தோம். நியூயார்க் சிட்டி நிஜமாவே பாரவசப்பட வைத்தது. நியூயார்க் சிட்டி-னு இல்லை. இருண்ட ஆப்பிரிக்கா-ல ஆன்ஸைட்-னா கூட கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு போயிருப்பேன்.வந்த விருந்தாளிய வரவேற்கிறத விட்டுட்டு என்னத்துக்கு வந்தீங்க னு வெள்ளக்காரி கவுண்ட்டர் ல விசாரிச்சா. உன் நாட்டுக்கு வருமானம் ஈட்டத்தான் நாங்க ரெண்டு பேரும் வேலை மெனக்கெட்டு வந்தோம்னு சொன்னேன். அவ சிரிச்சுக்கிட்டேஎங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட்டயும் போறட்டி பாத்தா. அப்போ பார்த்து இந்த சஞ்சய் பயபுள்ள மச்சி இவ செம்ம ஃபிகர் டா-னு சொன்னான் என் காதுல எனக்கு மட்டுமே கேக்குற ட்டோன்ல. மவனே அவளுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சுது உன்ன குப்புற படுக்கப்போட்டு மிதிக்க போறா னு சொன்னேன்.அதுக்கும் பல்ல காட்டினான் வெக்கமே இல்லாம. உனக்குலாம் எவன்டா விசா ப்ராஸெஸ் பண்ணினது-னு உள்ளுக்குள்ள குமுறிக்கிட்டேன். ஓருவழியா நம்ம ஊரு ஆட்டோ ஓட பெரிய ஸைஸ் வெர்ஷன் மாதிரி இருக்குற மஞ்சள் கலர் டாக்ஸிய புடிச்சு எங்க அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்.
அம்சமா ஒரு காக்கா குளியல் போட்டுட்டு ஆஃபீஸ் போய் சேந்தோம். அன்னைக்கு பெருசா வேலை எதுவும் இல்லை. சிலபல சம்பிரதாயங்கள் முடிந்தது. வெள்ளக்கார பங்காளி குரலை மட்டுமே இதுவரைக்கும் கேட்டு வந்த நான் முதல் முறையா எல்லாரயும் பாக்க முடிஞ்சது.சஞ்சய் வழக்கம் போல எதோ ஒரு சிவப்புதோல் இந்திய பொண்ணோட கடல போட்டுட்டு இருந்தான். ஆரம்பத்துலயே ஆரம்பிச்சிட்டாய்ங்கலா-னு வடிவேலு பொருமினத விட ஜாஸ்தியாவே பொருமினேன்.அன்றய பொழுது சீக்கிரமே முடிந்தது
ஒரு வாரம் கழித்து
எஸ்.எஸ்.என் நம்பர் லொட்டு லோசுக்கு எல்லாம் எடுத்து முடிச்ச அப்புறம் புதுசா ஒரு மொபைல் வாங்கினேன். என் வீட்டுக்கு கால் பண்ணி எல்லாரோடயும் ரொம்ப நேரம் பேசினேன்.அன்னைக்கு நைட் வெண்டைக்காய் சாம்பாரும் பீன்ஸ் போரியாலும் ஆன்ஸைட் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி என் மனைவி கிட்ட வாங்கின கே.டீ வச்சு ஓப்பேத்தினேன். சஞ்சய்-க்கும் சேர்த்து சமைத்தேன். நெனச்ச மாதிரியே எங்கயோ ஊர சுத்திட்டு லேட்-ஆ வந்தான்.எங்கடா போற இந்த நெரத்துல-னு கேட்டதுக்கு என் கேர்ள் ஃபிரண்டு வீட்டுல நைட் ஸ்டே பண்ண போறேன்னு கூலா சொல்லிட்டே கெளம்பி போய்ட்டான்
1 Comments:
good - velumani
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home